சினிமா

ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘அடங்க மறு’ படம் நவம்பரில் ரிலீசாக இருப்பததாக அறிவிக்கப்பட்டுள்ளது. #AdangaMaru #JayamRavi #Raashikhanna

`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்வேல் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் மேற்கொள்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. நவம்பர் கடைசி வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AdangaMaru #JayamRavi #Raashikhanna