சினிமா

‘பொட்டு’ படத்தில் கலக்கத்துடன் நடித்தேன்: மனம்திறந்த இனியா

வடிவுடையான் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொட்டு’ படத்தில் இரவு நேரத்தில் நிஜ கல்லறையில் தான் கலக்கத்துடன் நடித்ததாக நடிகை இனியா கூறியிருக்கிறார்.

படம் குறித்து கூறிய இனியா, ‘பொட்டு’ மருத்துவ பின்னணியில் நடக்கும் பேய் கதை. பொட்டு என்ற மலைவாழ் இன பெண், நாகரீக பெண் என 2 வேடங்களில் வருகிறேன். பரத் பல கெட்டப்பில் வருகிறார். நமீதா அகோரியாக வருகிறார். இன்னொரு ஹீரோயினாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

பேய் படத்தில் நடித்தது எனக்கு வித்தியாசமான அனுபவம். நிஜ கல்லறையில் இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடத்தினார்கள். கலக்கத்துடன் நடித்தேன்.

அம்ரேஷ் இசையில் எனக்கு நல்ல பாடல்கள் இருக்கிறது. மலைவாசிகள் சம்பந்தப்பட்ட காட்சி கொல்லிமலையில் எடுக்கப்பட்டது.

தெலுங்கு, மலையாளத்தில் இப்போது அதிக படங்களில் நடிக்கிறேன். மலையாளத்தில் சமுத்திரகனி இயக்க, ஜெயராம் நடிக்கும் ‘ஆகாசிமிட்டாய்’ படத்தில் நாயகியாக நடிக்கிறேன். முன்னதாக தமிழ், தெலுங்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அதிக வேலை இருந்ததால் மறுத்து விட்டேன். ஓவியா என் நெருங்கிய தோழி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு என்னிடம் பேசினார். இடையில் அவரை பற்றி சில தவறான தகவல்கள் வந்தது. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெயர் வாங்கியது சந்தோ‌ஷம். முன்பு குடும்ப பாங்கான வேடத்தில் நடித்தேன். இப்போது மார்டனுக்கு மாறி விட்டேன்” என்றார்.

SCROLL FOR NEXT