சினிமா

அருண்ராஜா காமராஜ்-க்கு ஆதரவாக களமிறங்கிய இந்திய வீராங்கனை

பெண்கள் கிரிக்கெட்டின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் அருண்ராஜா காமராஜ்-க்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றியருந்த வீராங்கனை ஸ்னேஹல் பிரதான் உதவ தனராக இருப்பதாக கூறியிருக்கிறார்.

அவர் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ள படத்தின் கதை களமும் இதுவரை யாரும் தொடாத, பெண்கள் கிரிக்கெட்டை பற்றியது என்பதால் அதுவே சினிமா ரசிகர்களிடையே சூடான செய்தியாக பரவி வருகிறது. இந்த செய்தி வெளியாகியதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி சார்பில் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்னேஹல் பிரதான் இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல் இப்படத்திற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் செய்ய தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.

ஸ்னேஹலின் இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவரது உதவியை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதாகவும், இப்படத்தின் தரத்திற்கும், விளம்பரத்திற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.