சினிமா

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஜெயலலிதா ரசித்த கேட்ட பாடல் எது தெரியுமா?

செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஜெயலலிதா ரசித்துக் கேட்ட பாடல் பற்றி பேசியிருக்கிறார். #CCV #ChekkaChivanthaVaanam

மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டு படத்தை பற்றியும், படக்குழுவினர் பற்றியும் பேசினார்கள்.

பின்னர் வைரமுத்து பேசும்போது, ‘மணிரத்னம் இயக்கத்தில் எனது பாடல் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களில் எனக்கு பிடித்தது ‘பம்பாய்’ படத்தில் இடம் பெற்ற ‘கண்ணாலனே...’ என்ற பாடல்தான். இந்த பாடல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவிற்கு வந்து, ரசித்து கேட்ட பாடல் என்று கூறினார்.