சினிமா

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரீன் பிர்சாடா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

மாலை மலர்

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாக இருக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரீன் பிர்சாடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘அன்னை பிலிம் பேக்டரி’ சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.