விக்ரம், ராஜேஷ் எம்.செல்வா 
சினிமா

கடாரம் கொண்டான் படம் குறித்த முக்கிய அறிவிப்பு

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் `கடாரம் கொண்டான்' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணியை விக்ரம் முடித்துவிட்டதாக படக்குழுவினர் நேற்று அறிவித்திருந்தது. 

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 3-ந் தேதி படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT