சந்தானம் 
சினிமா

சந்தானம் படத்தின் முக்கிய அறிவிப்பு

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

மாலை மலர்

 அதன்படி பிஸ்கோத் படத்தின் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஆர்.கண்ணன் இயக்கத்தில் முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா நடிக்கின்றனர். சவுகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி. புரடொக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.