பொன்மகள் வந்தாள் படத்தில் ஜோதிகா 
சினிமா

பொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். அதன்படி இப்படம் வருகிற மே 29-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை மே 21 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.