சினிமா

தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி வரும் `தில்லுக்கு துட்டு 2' படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். #DhillukuDhuddu2 #Santhanam

மாலை மலர்

சந்தானம் - அஞ்சல் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகிலாக வெளியான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். 

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ஷிர்தா சிவதாஸ் நடிக்கிறார். ஆனந்தராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் பிரபலமான அய்யப்பா பைஜூ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், `தில்லுக்கு துட்டு 2' படத்தின் முதல் சிங்கிள் ஜனவரி 12ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தை இம்மாதமே வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. #DhillukuDhuddu2 #Santhanam