சினிமா

விஸ்வரூபம் 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Vishwaroopam2 #KamalHaasan

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் வருகிற ஆகஸ்டில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று வருகிற ஜுன் 29-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தில் கமலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. #Vishwaroopam2 #KamalHaasan