சினிமா

விஸ்வரூபம் 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் 10-ல் ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தின் இந்தி பதிப்பிற்கான உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Vishwaroopam2 #KamalHaasan

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் ஜிப்ரான் இசையில் `நானாகிய நதிமூலமே', `ஞாபகம் வருகிறதா' உள்ளிட்ட பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் இந்தி பதிப்பை ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மெண்ட் கைப்பற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர். 

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. #Vishwaroopam2 #KamalHaasan