சினிமா

தமிழ்படம் 2 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தின் அடுத்த பாடல் மற்றும் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #TamizhPadam2 #TP2

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `தமிழ்படம் 2'. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். 

ரசிகர்களை கவர படம் குறித்த புதுப்புது அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வரும் படக்குழு, சினிமா, அரசியல் என பல்வேறு அட்ராசிட்டிகளையும் கலாய்த்து போஸ்டர்களை வெளியிகிறது. 

இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தில் இருந்து இரண்டாவது பாடல் மற்றும் 17-வது போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக இயக்குநர் சி.எஸ்.அமுதன் அறிவித்திருக்கிறார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TamizhPadam2 #TP2

SCROLL FOR NEXT