சினிமா

மாரி-2 படம் குறித்து பாலாஜி மோகன் முக்கிய அறிவிப்பு

இன்று முதல் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள நிலையில், தனுஷ் நடிப்பில் உருவாகும் மாரி-2 படத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Maari2 #Dhanush

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் துவங்கிய நிலையில், சமீபத்தில் சென்னை படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. இன்று முதல் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுவதால், போராட்டம் முடிந்த பிறகு மாரி-2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என்றம், தற்போது வரை 40 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், படத்தை இந்த ஆண்டு இரண்டாவது பாதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் பாலாஜி மோகன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். நடிகர் கிருஷ்ணா, வரலட்சுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். 

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். #Maari2 #Dhanush 

SCROLL FOR NEXT