சினிமா

மக்கள் செல்வன் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவர் விஜய்சேதுபதி தான் : இமான்

மக்கள் செல்வன் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவர் விஜய்சேதுபதி தான் என்று இசையமைப்பாளர் இமான் ‘கருப்பன்’ பட விழாவில் கூறியிருக்கிறார்.

மாலை மலர்

இதில் இசையமைப்பாளர் இமான் பேசும்போது, ‘இதற்கு முன்பே ஒரு படத்தில் பன்னீர் செல்வமும் நானும் வேலை செய்தோம். அது வெளிவரவில்லை. முதலில் ‘கருப்பன்’ தான் வெளி வந்திருக்கிறது. மக்கள் செல்வன் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு நபர் விஜய் சேதுபதி தான். அவர் மற்றவர்களுடன் பழகும் விதமே வியக்க வைக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி என்னை மிகவும் கவர்ந்து விட்டார். ஒன் மேன் ஷோவாக இந்த படம் இருக்கும். ஒரு சில ஹீரோக்களின் படம் வெற்றி தோல்வி தாண்டி நமக்கு பிடிக்கும் படமாக இருக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதியின் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம்’ என்றார்.