சினிமா

விறுவிறுப்பாக நடைபெறும் `இமைக்கா நொடிகள்' டப்பிங்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா - நயன்தாரா - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் `இமைக்கா நொடிகள்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாலை மலர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக நயன்தாராவும், நயன்தாராவின் சாதுவான கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்துள்ளதால் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருந்து, சிங்கிள் டிராக் ஒன்று விரைவல் வெளியாக இருக்கிறது.