சினிமா

இமைக்கா நொடிகள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா - நயன்தாரா - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் `இமைக்கா நொடிகள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #ImaikkaNodigal

மாலை மலர்

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `இமைக்கா நொடிகள்'.

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமான இதில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக நயன்தாராவும், நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். 

சமீபத்தில் வெளியாகிய பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் டிரைலரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நிலையில், படம் வருகிற 30-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #ImaikkaNodigal #Atharvaa #Nayanthara