சினிமா

தென்னிந்திய படங்களில் நடிக்க மறுக்கும் இலியானா - காரணம் இதுதான்

தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க மறுக்கும் இலியானா, சினிமாவில் என்னை கவர்ச்சி பொருளாகவே காட்டினார்கள். எனது நடிப்புத் திறமையை வெளியே கொண்டு வர முயற்சிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். #Ileana

மாலை மலர்

தற்போது அவர் கைவசம் ஒரு இந்தி படம் மட்டும் உள்ளது. தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுத்து வருகிறார். இதுகுறித்து இலியானாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

“நான் நடிக்க வந்த புதிதில் தமிழ், தெலுங்கில்தான் வாய்ப்புகள் வந்தன. அப்போது எனக்கு 18 வயது. சினிமாவை பற்றி எதுவும் தெரியாது. எனது அறியாமையை பயன்படுத்தி டைரக்டர்கள் பலர் கவர்ச்சியாக நடிக்க வைத்து விட்டார்கள். தொப்புளையும் உடம்பையும் காட்டும்படி சொன்னார்கள்.

கவர்ச்சி ஆடைகளை அணியச் சொன்னார்கள். சினிமாவில் என்னை கவர்ச்சி பொருளாகவே காட்டினார்கள். எனது நடிப்பு திறமையை வெளியே கொண்டு வர முயற்சிக்கவில்லை. கவர்ச்சியாக வந்தால் போதும் நடிப்பு திறமை தேவை இல்லை என்றனர். இந்திக்கு சென்ற பிறகுதான் சினிமா என்பது கவர்ச்சியை மட்டும் காட்டுவது இல்லை என்பது புரிந்தது. இதனால்தான் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க மறுக்கிறேன்.”