சினிமா

சொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை - இலியானா

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடிக்க விரும்புவதாக கூறிய இலியானா, தனது சொந்த விஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார். #Ileana #AmarAkbarAnthony

மாலை மலர்

தமிழ், தெலுங்கு படங்களின் மூலம் பிரபலமான இலியானா இந்திக்கு சென்ற பிறகு தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை தவிர்த்தார்.

இந்தியில் வாய்ப்பு இல்லாமல் போகவே மீண்டும் தெலுங்கில் அமர் அக்பர் ஆண்டனி படம் மூலம் களம் இறங்கி இருக்கிறார். தெலுங்கு படங்களின் இடைவெளி பற்றிக் கூறும் போது, “இந்தியில் அதிக படங்களுக்கு நேரம் ஒதுக்கியதால் தெலுங்கு படங்களுக்கு எனக்கு நேரம் குறைவாகவே கிடைத்தது.

தெலுங்கு திரைப்படங்களில் நடனமாடுவதற்கும், ஒரு காட்சி பொருளாக இருப்பதற்கும் விரும்பவில்லை. சரியான கதை அம்சமுள்ள திரைப்படத்திற்காக காத்திருக்கும் போது, ‘அமர் அக்பர் ஆண்டனி’ அப்படி அமைந்திருக்கிறது. நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுக்கிறேன் என்று பேசுகின்றனர். அது தவறு. இரண்டு மொழிகளிலும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றும், கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் பலரும் பேசினார்கள். எனது திருமணம், குடும்பம் உள்ளிட்ட சொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச நான் விரும்பவில்லை. நான் 20 வயதில் இருந்தபோது என் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தேன்.

பல வருடங்களாக திரைப்படங்களில் எல்லாவற்றையும் செய்தேன். இப்பொழுது 32 வயதாகிறது. என் சிந்தனை செயல்முறை மற்றும் ஆளுமை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில விவேகமான தேர்வுகள் செய்து வருகிறேன். நான் நடிக்கும் படங்களில் பிரதிபலிக்கிறேன். நீண்ட காலமாக நினைவுபடுத்தும் படங்களின் ஒரு பகுதியாகவே இருக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். #Ileana #AmarAkbarAnthony