சினிமா

பிரச்சினைகளை கண்டு கலங்க மாட்டேன்: அமலா பால்

பிரச்சினைகளை கண்டு கலங்க மாட்டேன், சாதிக்க அதிக காலம் இருக்கிறது என்று நடிகை அமலா பால் கூறியிருக்கிறார்.

“இந்த படத்தில் எனது பாத்திரத்தை அனுபவித்து நடித்திருக்கிறேன். தனுஷ் நல்ல நண்பர். கடுமையான உழைப்பாளி. தன்னுடன் நடிக்கும் மற்றவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்று விரும்புவார். அவரிடம் இருந்து புதிய வி‌ஷயங்களை கற்றுக்கொண்டேன்.

சின்ன வயதில் கஜோல் படங்களை பார்த்து இப்போது அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடைய நடிப்பை நான் நேரில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்துக்காக இயக்குனர் சவுந்தர்யா கடுமையாக உழைத்தார். சின்ன வி‌ஷயங்களில் கூட மிகவும் கவனம் செலுத்தினார்.

விஜய், விக்ரம் ஆகியோருடன் நடித்து விட்டேன். அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சில காரணங்களால் அதில் நடிக்க முடியவில்லை. அவரைப் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

SCROLL FOR NEXT