சினிமா

ஸ்ரீதேவியை மனதில் வைத்தே `பலூன்' படத்தில் நடித்தேன்: ஜனனி ஐயர்

புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள `பலூன்' படத்தில் ஸ்ரீதேவியை மனதில் தான் நடித்ததாக ஜனனி ஐயர் கூறியிருக்கிறார்.

'70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் 'பலூன்' படம் வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ஜெய், அஞ்சலி ஜோடிக்கு இணையான ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார் ஜனனி ஐயர்.

அவரது கதாபாத்திரம் குறித்து ஜனனி ஐயர் கூறியதாவது,

"என்னுடைய கதாபாத்திரம் 1980-களின் பிண்ணனியில், கொடைக்கானலில் வாழும் ஒரு பெண்ணை பற்றியது. மிகவும் கட்டுக்கோப்பான, ஜெய்யை காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் `மூன்றாம் பிறை' ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான நடிப்பை சார்ந்து இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார்.

காலம் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அந்த நடிப்புக்கு ஈடு, இணை ஏது, வரவே முடியாது என்றும் நாங்கள் பேசி கொண்டோம். ஆயினும் நான் நடிக்கும் போது, ஸ்ரீதேவி மேடம் அவர்களின் நடிப்பை பார்த்து வந்த உந்துதல் என்னை சிறப்பாக நடிக்க  வைத்தது எனலாம். என்னை வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் இது என்று சொல்லலாம். ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள் என்று உறுதியுடன் கூறுகிறார் ஜனனி ஐயர்.

SCROLL FOR NEXT