சினிமா

‘காலா’ பட ரகசியத்தை வெளியிட்ட ஹூமாகுரேஷி

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா’ ரகசியத்தை அப்படத்தில் நடிக்கும் நடிகையான ஹூமாகுரேஷி வெளியிட்டுள்ளார்.

முதலில் ரஜினி, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்த புகைப்படங்கள் வெளியாகின. அடுத்து ரஜினி பேசிய பஞ்ச் வசனம் வெளியானது. இந்த படத்தின் நாயகியாக நடிக்கும் இந்தி நடிகை ஹூமாகுரேஷி பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால் ‘காலா’ படத்தில் அவருக்கு என்ன வேடம் என்பது ரகசியமாக இருந்தது. இப்போது அதையும் ஹூமாகுரேஷி போட்டு உடைத்திருக்கிறார்.. இதுபற்றி டுவிட்டரில் தெரிவித்துள்ள அவர், ‘காலா’ படத்தில் எனது பெயர் ஜரீனா. நான் ஜரீனாவாக மாறிக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT