சினிமா

ஹவுஸ் ஓனர்

இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் இளம் தம்பதியின் கதையாக உருவாகவிருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் முன்னோட்டம்.

மாலை மலர்

இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து இயக்கும் படம் ‘ஹவுஸ் ஓனர்’.

அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில், அவருடைய ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ஜோனான் டி ஜான் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி கூறிய இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்...

சமீபத்தில் நான் மும்பைக்கு சென்று இருந்த போது ஒரு இந்தி திரைப்படம் பார்க்க நேரிட்டது. அந்த படம் என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அதன் தயாரிப்பாளரை சந்தித்து கேட்டேன். அது நடக்கவில்லை.

ஆனால், அந்த படம் பார்த்த பிறகு எனக்கு இருந்த ஒரு உந்துதலால் ஒரு புதிய கதையை எழுத ஆரம்பித்தேன். ஒரு அழகான, அன்பான இளம் தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பது தான் படத்தின் மைய கருத்து. இதை நகைச்சுவை இழையோட மென்மையாக சொல்லப்போகிறேன். இது குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும்” என்றார்.