சினிமா

'அவள்' சினிமா ரசிகர்களை திகிலில் உறைய வைப்பது நிச்சயம்: படக்குழு

'அவள்' சினிமா ரசிகர்களை திகிலில் உறைய வைப்பது நிச்சயம் என்று படத்தை வெளியிடும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

'வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனமும் 'எடாகி என்டர்டெயின்மெண்ட்' நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியான நாளிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ட்ரைலரின் காட்சியமைப்பும், பின்னணி இசையும் பார்ப்பவர்களை பயத்தில் உறைய வைக்கும்படியாக உருவாகி இருக்கும் இப்படம் நவம்பர் 3-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'விக்ரம் வேதா' படத்தை தொடர்ந்து 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் 'அவள்' படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. இது குறித்து 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' ரவீந்திரன் பேசுகையில்,

''உண்மையாகவே பயமுறுத்தி நடுங்கவைக்கும் படம் தான் 'அவள்'. ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு இணையாக 'அவள்' உள்ளது என உறுதியாக கூறலாம். பல விதமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் துணிச்சலாக ஏற்று நடித்து ஜொலிப்பவர் நடிகர் சித்தார்த். நவம்பர் 3-ஆம் தேதி ரிலீஸாகவுள்ள 'அவள்' தமிழ் சினிமா ரசிகர்களை திகிலில் உறைய வைப்பது நிச்சயம்.''

இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து நடிகர் சித்தார்த்தும் எழுதியுள்ளார். நடிகர் அதுல் குல்கர்னி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையில், ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் 'அவள்' உருவாகியுள்ளது.