சினிமா

சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சதுரங்க வேட்டை 2 படத்தில் நடித்ததற்கு அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி இருப்பது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பிரச்சனையை பேசி தீர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #SathurangaVettai2 #ArvindSwami

நடிகர் மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்க `சதுரங்க வேட்டை 2' என்ற படம் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அரவிந்த் சாமி தனது சம்பளபாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் அளிக்க வேண்டும் என்று மனோ பாலா மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கை விசாரித்து மனோ பாலா பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மனோபாலா பதில் மனுவில் அரவிந்த்சாமியுடன் சமரசமாக செல்லத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

ஐகோர்ட்டுக்கு தகவல் சொல்லாமல் தான் `சதுரங்க வேட்டை 2' படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன் என்றும் முதல் தவணையாக 25 லட்சம் ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும் உறுதியாக கூறி இருந்தார்.

இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு மனோபாலா, அரவிந்த்சாமி இரு தரப்பினரும் அக்டோபர் 12-ந் தேதி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. #SathurangaVettai2 #ArvindSwami