சினிமா

மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அஜித்துக்கு நிகர் அவரே: ‘விவேகம்’ நடிகை அமிலா டெர்ஜி மெகிக்

மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அஜித்துக்கு நிகர் அவரே என்று ‘விவேகம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜி மெகிக் கூறியிருக்கிறார்.

‘விவேகம்’ உலகத்தரம் வாய்ந்த படம். இதன் மூலம் இந்திய சினிமாவில் நான் கால் பதிப்பது எனக்கு பெருமை. ஹாலிவுட் நாயகன் பியர்ஸ் பிராஸ்னன் நடித்த ‘தி நவம்பர்மேன்’ படத்தில் நான் செய்திருந்த கதாபாத்திரத்தை பார்த்த இயக்குனர் சிவா ‘விவேகம்’ பட வாய்ப்பினை எனக்களித்தார் என அறிந்தேன்.

விவேகத்தில் எனது நடிப்பு மட்டுமல்ல ஆக்‌ஷன் காட்சிகளில் கடின சண்டை போடும் திறனும் தேவைப்பட்டது. அதில் எனது கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அஜித்தை இந்திய சினிமாவில் சந்தித்த பொழுது துளி கூட தலைக்கனம் இல்லாமல் எளிமையாக பழகினார். ஆபத்தான சண்டை காட்சியையும் டூப் வேண்டாம் என்று தானே செய்து அசத்தினார்.