`தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு கார்த்தி தற்போது `கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார்.
பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் அர்த்தனா நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக ரஜத் என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகி இருக்கிறார். த்ரிஷாவின் மோகினி படத்தை தயாரிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
பயணத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை ஹாரிஸ் ஜெயராஜ் தொடங்கிவிட்டதாகவும், படப்பிடிப்பு நடத்தப்படும் இடங்களுக்கு நேரிலேயே சென்று அந்த இடத்திற்கு ஏற்ப இசையமைக்கும் முயற்சியில் ஹாரிஸ் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹாரிஸ் பொதுவாகவே வெளிநாடுகளுக்கு பயணிப்பது வழக்கம். ஆனால் இந்தமுறை படப்பிடிப்பு நடத்தப்படும் தளத்திற்கு சென்று படத்தின் காட்சிக்கு ஏற்ப இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.