சினிமா

புதிரான இயக்குநருடன் இணையும் ஹரிஷ் கல்யாண்

இளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக புதிரான இயக்குநர் ஒருவருடன் கூட்டணி வைக்க இருக்கிறார். #HarishKalyan #RanjithJayakodi

மாலை மலர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியிருக்கும் ஹரிஷ் கல்யாண் தற்போது இளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், படஅதிபர்கள் போராட்டம் முடிந்த பிறகு வருகிற ஜூன் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக ரஞ்சித் ஜெயகொடியுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான புரியாத புதிர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது, 

எனது அடுத்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். இந்த படம் தனது முதல் படம் போல் இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையில், கருத்துள்ள ஒரு படமாக இருக்கும் என்றார். 

படஅதிபர்கள் போராட்டம் முடிந்த பிறகு இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு பிரம்மாண்டமான முறையில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். #HarishKalyan #RanjithJayakodi