சினிமா

நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றிய ஹரிப்பிரியா

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வரும் ஹரிப்பிரியா, திருப்பதி கோவிலுக்கு நடந்து சென்று தனது வேண்டுதலை நிறைவேற்றி இருக்கிறார்.

தமிழில் ‘கனகவேல் காக்க’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹரிப்பிரியா. இப்படத்தை தொடர்ந்து அர்ஜுனுடன் ‘வல்லக்கோட்டை’, சேரன், பிரசன்னாவுடன் ‘முரண்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவரது நடிப்பில் ‘வாராயோ வெண்ணிலாவே’ என்ற படம் உருவாகி ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். குறிப்பாக கன்னடத்தில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தற்போது தெலுங்கில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘ஜெய் சிம்ஹா’ என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஹரிப்பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ஹரிப்பிரியா திருப்பதி கோவிலுக்கு நடைப்பாதை வழியாக சென்றிருக்கிறார். பொதுமக்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற இவ்வாறு நடந்து செல்வார்கள். நடிகர்கள், நடிகைகள் எல்லோரும் வி.ஐ.பிக்கள் செல்லும் வழியாக சாமி தரிசனம் செய்வார்கள்.

இதற்கு மாறாக பொதுமக்களோடு மலை வழியாக சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் ஹரிப்பிரியா. சுமார் 11 கி.மீ.தூரம், 3550 படிகெட்டுகள் அலிப்பிரியில் இருந்து திருமலாவிற்கு நடந்து சென்றேன் என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஹரிப்பிரியா.

‘ஜெய் சிம்ஹா’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடுவதற்கும், வெளியாகும் படங்கள் வெற்றி பெறவும் இந்த வேண்டுதலை ஹரிப்பிரியா செய்திருப்பதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT