கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தமிழ் ‘டுவீட்’களை பதிவு செய்வார். அதற்கு ரசிகர்களும் ஏராளம். இந்நிலையில் சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.
இந்த படத்தை அடுத்து கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற வெப் சீரிஸில் திருவள்ளுவர் கேரக்டரில் நடிக்கிறார் ஹர்பஜன் சிங். அடுத்து ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பிரண்ட்ஷிப்’ என்று ‘டைட்டில்’ வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.
இதுகுறித்து டுவீட் செய்திருக்கும் ஹர்பஜன் சிங், நேற்று கீச்சு, சினிமா கதாபாத்திரம், இணைய தொடர். இன்று பிரண்ட்ஷிப் படத்தின் நாயகன். தமிழ் மக்களுக்கு நன்றி. திருக்குறள் டூ திரைப்பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் தலைவர் தல தளபதி சின்னாளப்பட்டி சரவணன். அசத்துவோம்” என்று கூறியுள்ளார்.
சின்னாளப்பட்டி சரவணன் தான் ஹர்பஜன் சிங்கின் சமூகவலைதள கணக்குகளையும் நடிப்புக்கான தேதிகளையும் கவனித்து வருகிறார்.