காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று
உச்ச நீதிமன்றம் வழங்கிய நிலையில், இன்னமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது.
மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காவிரி விவகாரத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திய நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
“காவிரி மேலாண்மைக்கு நாம் போராடும்போது இந்த கோரிக்கையை முன்னிறுத்துவோம். காவிரி மற்றும் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பெட்ரோல் எடுக்கும் பகுதிகளைப் பாதுகாக்கும் நாம் ஏன் உண்ணும் உணவிற்காக விவசாயத்திற்காக அதை செய்யக்கூடாது. அப்படி அறிவிக்கும் பட்சத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் மணல் கொள்ளை, ஹைட்ரோகார்பன், ஆலை விதிமீறல்கள் போன்ற எதையும் செய்ய முடியாது”
இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். #CauveryWaterManagement #CauveryManagementBoard