சினிமா

சரஸ்வதி பூஜை களத்தில் ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஒன்று சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மாலை மலர்

அவர் தற்போது பாலா இயக்கத்தில் `நாச்சியார்', சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் `அடங்காதே', பாபா பாஸ்கர் இயக்கத்தில் `குப்பத்து ராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர `ஐங்கரன்', `4ஜி',  `100% காதல்', `சர்வம் தாள மயம்' உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சசி இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து ஒரு படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளார்.

பாண்டிராஜின் பசங்க புரொடக்சன்ஸ் தயாரிப்பில் `செம' என்ற புதிய படத்திலும் ஜ.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.

இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளரான வள்ளிகாந்த் இயக்கியிருக்கிறார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார். அர்த்தனா விஜயகுமார் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.