சினிமா

டப்பிங் பணிகளை முடித்தார் ஜி.வி. : அடுத்தகட்ட பணிகளில் `நாச்சியார்' படக்குழு

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் `நாச்சியார்' படத்தில் டப்பிங் பணிகளை நடிகர் ஜி.வி.பிரகாஷ் முடித்து விட்டதாக கூறியிருக்கிறார். மேலும் அடுத்தகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் `நாச்சியார்'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜோதிகா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

‘நாச்சியார்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில், நாச்சியார் படத்தில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.