சினிமா

விஷால் அலுவலகத்தில் சோதனையா?: தவறான தகவல் - அதிகாரி மறுப்பு

சென்னையில் உள்ள நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியதாக வந்த தகவல் தவறானது என்று உயரதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சில மணி நேரத்திற்கு முன்பு, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினார்கள் என்றும், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னையில் உள்ள நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வந்த தகவல் தவறானது என்று உயரதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, சரக்கு மற்றும் சேவை வரி இயக்குனரகத்தின் சென்னை மண்டல நுண்ணறிவுப் பிரிவு இணை இயக்குநர் ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘இப்படி ஒரு சோதனையை சரக்கு மற்றும் சேவை வரி இயக்குனரகத்தின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் யாரும் நடத்தவில்லை. இதுதொடர்பாக பரப்பப்படும் செய்திகள் சரியல்ல, தவறானவை’ என்று தெரிவித்துள்ளார்.