போலி நூல்களை கண்டறிந்து அகற்றும் அறம் சார்ந்த குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவையில் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பெரிய அறிவுலக் நூலகம் பணிகள் தற்போதை தவெக ஆட்சியில் நிறைவுபெற்று முதலமைச்சர் விஜய் அவர்களால் திறந்து வைக்கபப்ட்டது . இந்த நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய கட்டுரை மூலம் இந்த நூலகத்தில் விதிகளை மீறி முறையற்ற வகையில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
கல் விளக்கு' போன்ற சரிவர அறியப்படாத அல்லது முகவரி இல்லாத போலிப் பதிப்பகங்களிடம் இருந்து மட்டும் 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பல போலியான ISBN (பன்னாட்டுத் தரப் புத்தக எண்) எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இவரின் கட்டுரை மூலம் அம்பலமான இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது, இந்த ஊழலலுக்கு அரசியில் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி இந்த சம்பவம் குறித்து அரசுக்கு வேண்டுக்கோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இது குறித்து சீனு ராமசாமி தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
கோவை பெரியார் பொது நூலகத்தில் போலி நூல்களின் அணிவகுப்பு அளவுக்கு அதிகமாக இருப்பதாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் அதை ஆய்வு செய்யும் ஊடகத்துறையினர் பதிவிட்டு வருகிறார்கள்.
நூலகத் தேர்வுக் குழுவை உருவாக்கியது போல 'போலி' நூல்களைக் கண்டறிந்து அகற்றும் சிறந்த, அறம் சார்ந்த குழுவைத் தமிழக அரசு மாவட்டம் தோறும் உருவாக்கி, உடனடியாகத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை நூலகங்களிலும் ஆய்வு செய்து அங்கே இருந்துவரும் 'போலி' நூல்களை அப்புறப்படுத்தும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், பொது நூலகங்கள், கிளை நூலகங்கள், தமிழக அரசின் ஆவணக் காப்பகங்கள் என அரசு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவின் நூலகங்களையும் ஆய்வு செய்ய வேண்டியது மிக அவசியம். மேலும் அப்படி ஒரு சூழல் உருவாகி இருப்பதை நினைத்து உள்ளத்தால் வருந்துகிறேன்.
ஒரு பெருமாள் முருகன் நூலகத்துக்கு சென்றது போல ஒவ்வொரு சிற்றூரிலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அனைத்து துறைகளை சார்ந்தவர்கள் நூலகங்களுக்கு சென்று போலி நூல்களை கண்டறிந்து உதவும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
என்று தெரிவித்துள்ளார்.