சினிமா

96 படத்திற்கு கிடைத்த வரவேற்பால் நாயகியான கவுரி கிஷன்

96 படத்தில் திரிஷாவின் இளமை தோற்றத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த கவுரி கிஷன் அடுத்ததாக மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். #96TheMovie #GouriKishan

96 திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக திரிஷா ஏற்படுத்திய தாக்கத்துக்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்தியவர் ‘குட்டி திரிஷா’வாக நடித்த கவுரி கிஷான். அந்தப் படத்தில் நடித்த அத்தனை கேரக்டர்களுமே அவர்களது சிறிய வயதில் அனைவரையும் ஈர்த்தனர்.

அந்த வகையில் குட்டி திரிஷாவாக நடித்த கவுரி கிஷானுக்கு அடுத்த திரைப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் அடுத்ததாக மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாகவிருக்கிறார்.

பிரின்ஸ் ஜாய் இயக்கும் ‘அனுகிரகீதன் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் சன்னி வெய்னுக்கு ஜோடியாக கவுரி நடிக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது ‘96 படத்துக்கு கிடைத்த வரவேற்பால் கதைகளை கவனமாக தேர்வு செய்கிறேன். இந்த படமும் 96 படம் போல நமது வாழ்க்கைக்கு நெருக்கமான படமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். #96TheMovie #GouriKishan #AnugraheethanAntony