இளம் நடிகை தன் திறமையால் படிப்படியாக முன்னேறி பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தாராம். இப்படி வளர்ந்து வரும் நிலையில் திடீரென நடிகையின் படங்களில் சில சரிவை சந்திக்கவே நடிகையை ஹீரோயினாக புக் செய்ய பல இயக்குனர்கள் தயங்கினார்களாம்.
இதனால் சோகமான நடிகை கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாராம். அதுவும் வசூல் ரீதியாக முன்னேற்றத்தை தொடாததால் ஷாக்கான இயக்குனர் ஒருவர் தன் படத்தில் புக் செய்து படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் நடிகையை படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம். இதனால் நடிகையை ராசி இல்லாதவர் என்று பலர் கூறுகிறார்கள்.