சினிமா

ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தேடி வருகின்றன: தன்ஷிகா

ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தன்னை தேடி வருகின்றன என்று ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்திருந்த தன்ஷிகா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்த தன்ஷிகாவின் முழு பேட்டியை கீழே பார்ப்போம்.

மாலை மலர்

“இந்த படத்தில் நடிக்க சிபாரிசு செய்தவர் இயக்குனர் சமுத்திரக்கனி. கதை கேட்டேன், பிடித்தது. இளையராஜா இசை என்றார்கள். நடிக்க ஒப்புக் கொண்டேன். மலேசியாவில் கதை நடக்கிறது. 2 குழந்தைகளின் அம்மாவாக எப்படி வாழ்க்கையை சமாளிக்கிறேன் என்பது கதை. படம் நன்றாக வந்திருக்கிறது.

‘கபாலி’யில் குட்டையாக முடிவெட்டி கேங்ஸ்டராக வந்தேன். ரஜினி சார் படத்தில் நடித்த பிறகு வித்தியாசமான கதைகள் வருகின்றன. நானும் சந்தோ‌ஷமாக ஏற்கிறேன். ‘எங்க அம்மா ராணி’ படத்தின் கிளைமாக்ஸ் அருமையாக இருக்கும். நல்ல கதைகள் கிடைத்தால் அம்மா வேடத்தில் நடிக்க ஆட்சேபனை இல்லை.