இந்நிலையில், விவசாயிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இயக்குநர் கௌதமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையாவது,
சுதந்திரத்துக்கு பின்பும் செத்துக்கொண்டிருக்கும் அதிகம் பேர் தமிழர்கள்...
இன்றும் கூட சுதந்திரதின பாதுகாப்புக் கருதி டெல்லியில் போராடும் எங்கள் தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்...
சீனாவை விட பாகிஸ்தானைவிடவா எங்கள் விவசாயிகள் கொடூரமானவர்கள்.
ஜந்தர்மந்தர் பகுதியிலிருந்த எங்கள் விவசாயிகளை பலவந்தமாக தூக்கிச் சென்று சிறைப்படுத்தி இருக்கிறார்கள்.
காலையில் இருந்து உணவுக்கூட கொடுக்கவில்லை டெல்லி அதிகார வர்க்கம்.
தேசியக்கொடியை குத்திக்கொண்டிருக்கும் எங்கள் தமிழர்களின் நெஞ்சில் இந்திய அரசு ஈட்டியை சொருகக் கூடாது...
உடனடியாக எங்கள் தமிழக விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும்.
இரணமாகி கிடக்கிறது ஒட்டுமொத்த தமிழர்களின் மனதும். - இயக்குநர் வ.கௌதமன்