சினிமா

துல்கர் சல்மான் படத்தில் கவுதம் மேனன்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் கவுதம் மேனன் முக்கிய தோற்றத்தில் நடிக்கிறார். #KKK #DulquerSalmaan

மாலை மலர்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தமிழில் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடிக்கும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்டைலிஷ் இயக்குநர் கவுதம் மேனன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்பில் துல்கர் சல்மான் - கவுதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடிக்கின்றனர்.

துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைக்கின்றனர். எஃப்.டி.எஸ் பிலிம்ஸ் சார்பில் அண்டோ ஜோசப் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். #KKK #DulquerSalmaan