சினிமா

படப்பிடிப்பு முடிந்தது: கவுதம் மேனன் அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் கவுதம் மேனன் தயாரிப்பில் உருவாகி வரும் `நரகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் சந்தீப் கிஷன், ஆத்மிகாவின் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அரவிந்த்சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரணின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டரில் கவுதம் மேனன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

`திட்டமிட்டபடி நரகாசூரன் படத்தின் 41 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கார்த்திக் நரேனுக்கு பாராட்டுக்கள். தயாரிப்பாளராக இருப்பதால் படத்தை முதலில் பார்க்க முடியும். படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்' இவ்வாறு கவுதம் மேனன் கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT