சினிமா

விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கவுதம் மேனன்: அப்பளம் போல் நொறுங்கிய கார்

தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும்படியாக படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவரான கவுதம் மேனன் சென்ற கார் லாரி மீது மோதியதில் அவர், காயங்களுடன் உயிர் தப்பினார்.

மாலை மலர்

மின்னலே படத்தில் இயக்குனராக அறிமுக மானவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் வேட்டை யாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இன்று அதிகாலை மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி கவுதம் வாசுதேவ் மேனன் சொகுசு காரில் வந்து கொண்டிருந் தார்.

செம்மஞ்சேரி பால் பண்ணை வந்த போது சிக்னலில் திரும்பி சென்ற டிப்பர் லாரி மீது கார் வேக மாக மோதியது. இதில் கவுதம் மேனன் கார் அப்பளம் போல் நொருங்கியது.

இந்த விபத்தில் அவர் அதிர்ஷ்ட வசமாக காயங்களு டன் உயிர் தப்பினார். பின்னர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றார். இதுபற்றி கிண்டி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.