சினிமா

ரிலீசுக்கு தயாரான கவுதம் கார்த்திக்கின் அடுத்த படம்

`ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து கலா பிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்திருக்கும் `இந்திரஜித்' படத்திற்கு சென்சாரில் கிடைத்த வரவேற்பால் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை மலர்

இதுஒருபுறம் இருக்க அறிமுக இயக்குநர் கலா பிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - அஷ்ரிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் `இந்திரஜித்' சென்சாரில் `யு' சான்றிதழை பெற்றுள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சோனாரிகா படோரியா, ராஜுவர் சிங், சுதன்சு பாண்டே, அமித், பிரதாப் போத்தன், சச்சின் கெடேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது.

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருதால்  விரைவில் ரிலீசாகு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவுதம் கார்த்திக் தற்போது `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', `இருட்டு அறையில் முரட்டு குத்து' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். திரு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.