இதில் ‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தில் நடித்துள்ள வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்த்ரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்த்ரிகா இந்த படத்தில் பேயாக வருகிறார். யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் படக்குழு சென்னைக்குத் திரும்பியது. தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தாய்லாந்திற்கு இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக இக்குழு செல்ல உள்ளது.