அதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தீபாவளியை ஒட்டி சுசீந்திரன் இயக்கத்தில் `நெஞ்சில் துணிவிருந்தால்', ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிப்பில் `சொல்லி விடவா', கவுதம் கார்த்திக்கின் `ஹரஹர மகாதேவகி' உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த படங்களுக்கு தியேட்டர்களை ஒதுக்கீடு செய்யும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தீபாவளி ரேசில் இருந்து கவுதம் கார்த்திக்கின் `ஹரஹர மகாதேவகி' விலகி இருக்கிறது. மேலும் அந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜை விடுமுறை நாளான செப்டம்பர் 29-ல் `ஹரஹர மகாதேவகி' படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.