சினிமா

அக்ஷய் குமாருடன் இணைந்த கணேஷ் வெங்கடராமன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் கணேஷ் வெங்கட்ராம் தூய்மை இந்தியா திட்டமான `சொச் பாரத்' மூலம் நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்திருக்கிறார். #SwachhBharat #GaneshVenkatraman

அபியும் அனுவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். தொடர்ந்து உன்னைப் போல் ஒருவன், தீயா வேலை செய்யனும் குமாரு, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

இந்த நிலையில், ஹார்பிக்கின் `சொச் பாரத்' பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக கணேஷ் வெங்கட்ராமன்  நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சாரத்தின் வடஇந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அக்ஷய் குமாருடன், கணேஷ் வெங்கட்ராமன் தற்போது கைகோர்த்துள்ளார். 

அக்ஷய் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் சம்பந்தப்பட்ட விளம்பர படங்களின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கணேஷ் வெங்கட்ராம் அது பற்றி கூறும்போது, “ நான் அக்ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போதும் அவர் மது அருந்தாமல், எந்த தீய பழக்கங்களும் இல்லாமல், உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம். நான் தமிழ் படப்பிடிப்பிலும், அவர் ஹிந்தி படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டோம். 

தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது. இந்திய அரசாங்கத்துடன் `ஹார்பிக்' நிறுவனம் இந்த திட்டத்துக்காக கை கோர்த்துள்ளது சிறப்பானதாகும் “ என்றார். 

தற்போது தமிழில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் `மை ஸ்டோரி' படத்தில் ப்ரிதிவி ராஜ், பார்வதி உடன் சிறப்பு தோற்றத்திலும் கணேஷ் வெங்கடராம் நடித்துள்ளார். #SwachhBharat #GaneshVenkatraman #AkshayKumar

SCROLL FOR NEXT