‘திரீ பில்போர்ட்ஸ் அவுட் சைடு எப்பிங் மிஸ்சோரி’ என்ற படத்தில் தனது மகளை கற்பழித்து கொன்றவர்களை பழிவாங்கும் தாயாக நடித்து இருந்தார். அவரது சிறந்த நடிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
விழா முடிந்ததும் விருது பெற்றவர்களுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பிரான்சிஸ் மெக்டார்மென்டின் ஆஸ்கர் விருது திடீரென மாயமானது. அதை யாரோ திருடி விட்டனர்.
அதை அறிந்த நடிகை பிரான்சஸ் மிக்டார்மண்ட் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். அது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது.
உடனே போலீசார் அதிரடியாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் விருந்தில் பங்கேற்ற டெர்ரி பிரையாந்த் (47) என்பவர் கைது செய்யப்பட்டார்.