வேலைக்கு புதிதாக ஆட்கள் எடுக்கும் முடிவை தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்ப பெறுவதுவரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என்றும் அறிவித்து உள்ளனர். பெப்சி வேலை நிறுத்தம் காரணமாக சென்னையிலும் வெளியூர்களிலும் நடந்து வந்த சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
‘பெப்சி’யில் கேமராமேன்கள், லைட்மேன்கள், இசையமைப்பாளர்கள், எடிட்டர்கள், ஸ்டண்ட் இயக்குனர்கள், மேக்கப்மேன்கள், டான்ஸ் மாஸ்டர்கள், தயாரிப்பு மேற்பார்வையாளர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், கலை இயக்குனர்கள் உள்ளிட்ட பிரிவினரை உள்ளடக்கிய 23 சங்கங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் நேற்று படப்பிடிப்புகளையும் டப்பிங், ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகளையும் புறக்கணித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த 40 சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பெப்சி தரப்பில் கூறப்பட்டது. ரஜினிகாந்த் நடித்து வரும் காலா, விஜய்யின் மெர்சல், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களின் படப்பிடிப்புகளும் நடக்கவில்லை.
ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தின் தொழில் நுட்ப பணிகளும் நிறுத்தப்பட்டன.