பெங்களூரில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த இவர், நடிப்பு ஆசையால் அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார். முறைப்படி நடனம், பாட்டு, கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம் படித்திருக்கிறார். ஆல்பங்களிலும் பாடி இருக்கிறார். சினிமா அனுபவம் பற்றி ஆத்மிகாவிடம் கேட்டபோது.......
‘‘நான் நடிக்க விரும்பினேன். பெற்றோர் அதை அனுமதித்தது பெரிய விஷயம். சினிமாவில் நடிக்கும் ஆசையால் ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து என்னை தயார் படுத்திக் கொண்டேன். நான் நடித்திருந்த குறும்படத்தை பார்த்து தான் ஆதி, என்னை ‘மீசையை முறுக்கு’ படத்தில் நடிக்க வைத்தார். குறும்படத்தில் நடித்து பயிற்சி பெற்று இருந்ததால் தான், ஆதி வைத்த நடிப்பு தேர்வில் வெற்றி பெற முடிந்தது.