சினிமா

விஜய் பிறந்தநாளுக்கு உடல் உறுப்பு தானம் செய்த ரசிகர்கள்

விஜய் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் 43 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்கள்.

இந்த விழாவில் காஞ்சி கிழக்கு மாவட்ட பம்மல் மற்றும் பல்லாவரம் நகர விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பம்மல் நகர அமைப்பாளர் சத்யா ஏற்பாடு செய்திருந்தார்.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். மேலும் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT