ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பலூன்’. இதில் ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்திருந்தார்கள். சினிஷ் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் காமெடி ரொமன்ஸ் கலந்த ஹாரர் படமாக வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
இருந்தாலும், இப்படம் ஒரு சில திரையரங்குகளில் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதை படக்குழுவினர் சுமாரான வெற்றி என்று போஸ்டர் வெளியிட்டிருக்கின்றனர். இதைப் பார்த்த ரசிகர்கள் படக்குழுவினர்களை பாராட்டி வருகின்றனர்.
ஒரு படம் வெளியாகி மறுநாளே சூப்பர் வெற்றி, இமாலய வெற்றி என்று விளப்படுத்தி கொண்டாடி வரும் நிலையில், ‘பலூன்’ படக்குழுவினரின் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த போஸ்டர் சினிமா உலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.